#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#வீடியோ : காதல் ரகசியத்தை போட்டு உடைத்த குக்வித் கோமாளி புகழ்...! திருமணம் எப்போது தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது கலாட்ட நிறைந்த காமெடி பேச்சால் ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
அதைத்தொடர்ந்து புகழ் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் புகழின் உச்சிக்கே சென்ற புகழுக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்துவரும் நிலையில் பயங்கர பிஸியாக உள்ளார். மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி 3 சீசனிலும் கலந்து கொண்டு தனது திறமையை இன்னும் அதிகமாக மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார். மேலும் காதலியை பற்றியும் இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார். காதலியின் பெயர் பென்சி என்றும், நாங்கள் 5 வருடமாக காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கபோவது யாரு ஆடிஷன் போகும்போதே தெரியும்.மேலும் குக்வித் கோமாளி சீசன் 1, 2 வில் எனக்கு சப்போர்ட் ஆக இருந்தாங்க. இந்த வருடத்தில் நாங்கள் திருமணம் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.