கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்விஷாவுக்கு காதலா?.. இன்ஸ்டாவில் அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் வைரல்..!!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான பிரித்விஷா, நடிகையை காதலிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்விஷா. இவர் நடிகையும் மாடலுமான நிதி தபாடியாவுடன் காதலில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அத்துடன் தனது வீட்டில் நடைபெற்ற தசரா திருவிழாவை முன்னிட்டு, பிரித்விஷாவும், நிதி தபாடியாவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் தனக்கு கர்பா நடனம் கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே, முன்பே வெளியாகியிருந்த தகவல்களையும் வைத்து ரசிகர்கள், 'அப்போ உண்மையில் காதல்தானா?, அமோகம்' என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.