கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
17 வயது சிறுமி கர்ப்பம்; 21 வயது இளைஞன் போக்ஸோவில் கைது.. காதல் பெயரில் கட்டாயப்படுத்தி அத்துமீறல்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, பெரிய எலந்தப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் தில்லை கோவிந்தன். இவரின்மகன் ஸ்ரீகாந்த் (21), பொறியியல் பட்டதாரி ஆவார்.ஸ்ரீகாந்துக்கு, பண்ரூட்டியில் வசித்து வரும் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
காதல் பெயரில் பலாத்காரம்
இதனிடையே, மாணவியிடம் பழக்கத்தை ஏற்படுத்திய ஸ்ரீகாந்த், பின்னாளில் சிறிய காதலிப்பதாக கூறி இருக்கிறார். காதல் வலையில் விழுந்த சிறுமியை, பலமுறை திருமண ஆசை காட்டி, கட்டாயப்படுத்தி பலாத்காரமும் செய்துள்ளார்.
இதையும் படிங்க: மகளை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த தந்தை; 2 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்த போலீஸ்.!
போக்ஸோவில் கைது
இதனால் சிறுமி தற்போது கர்ப்பமான நிலையில், அவரின் பெற்றோருக்கு விபரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பண்ரூட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.
இதையும் படிங்க: சென்னை: 13 வயது சிறுமி பலாத்காரம்; காதல் பெயரை சொல்லி இளைஞர் பகீர் செயல்.!