#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இப்படியொரு ஆசை இருந்ததா! நிறைவேறாமலே போயிருச்சே! கண்கலங்கும் ரசிகர்கள்!!
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நேற்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென சரிந்து விழுந்துள்ளார்.
பின்னர் சுயநினைவின்றி இருந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் புனித்தின் விருப்பப்படி அவரது மறைவிற்கு பிறகு இரு கண்களும் தானம் செய்யப்பட்டது.
மேலும் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. புனித் ராஜ்குமாருக்கு ஆசை ஒன்று இருந்துள்ளது. அதாவது
தனது அண்ணன் சிவராஜ் குமார் நடிக்கும் ஒரு படத்தை தான் இயக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்துள்ளது. மேலும் இதுகுறித்து அவர் தனது நண்பர்களிடமும் கூறி வந்துள்ளார். ஆனால் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. இதனைக் கூறி அவரது குடும்பத்தினர்கள், ரசிகர்கள் கண்கலங்கியுள்ளனர்.