நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே.. தொடரும் விவாதங்களால் கதறும் இயக்குனர் அமீர் சுல்தான்..!



Director Ameer Sultan Video about Jaffar Drug Case

 

டெல்லியில் தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 3 பேர் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடந்த விசாரணையில் முன்னாள் திமுக பிரமுகர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத்தை கொண்ட ஜாபர் சாதிக் ரூ.2000 கோடி அளவிலான போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. 

இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி சீல் வைத்தனர். குடும்பத்துடன் தலைமறைவான ஜாபருக்கு வலைவீசப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களில் அமீரை நேரடியாக தொடர்புபடுத்தி பல கருத்துக்கள் உணவைக்கப்படுகிறது. 

ஏனெனில் தொழில் பங்குதாரர் போல இருந்து வந்த அமீர் - ஜாபர் தொழிலும் செய்து வந்துள்ளனர். இதுதொடரான நிகழ்வுகள் முன்பு நடைபெற்று இருக்கின்றன. தயாரிப்பாளரான ஜாபரை தம்பி போலவும் அமீர் பாராட்டி இருக்கிறார். தற்போதைய விவகாரத்தால் அமீருக்கு எதிராக விசாரணை திரும்பலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், அமீர் வெளியிட்டுள்ள விளக்க வீடியோவில், "இறைவன் மிகப்பெரியவன் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் குறித்த நிலைப்பாட்டை தெரிவித்தபின்னரும், சிலர் என்னை சமூக வலைத்தளங்களில் குற்றச்செயலோடு தொடர்புபடுத்தி வீடியோ வெளியிடுகிறார்கள். 

அடிப்படையாக நான் மது, விபச்சாரம் போன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தார்தங்களை கொண்ட மார்க்கத்தை நான் பின்பற்றுபவன். இவ்வாறான செயலில் என்னை தொடர்புபடுத்தி பேசுவது எனது பெயருக்கு களங்கத்தை தரலாம், குடும்பத்திற்கு வருத்தம் தரலாம், நீங்கள் கூறும் தகவலை விசாரிக்க காவல்துறை உட்பட பல துறையினர் இருக்கிறார்கள். 

அவர்கள் என்னை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நான் தயாராக இருக்கிறேன். இந்த சமயத்திலும் எனக்கு ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றிகள், இறைவன் மிகப்பெரியவன்" என கூறினார்.