#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாய்ஸ் திரைப்படத்தில் சித்தார்த்துக்கு பதில் இவர்தான் நடிக்க இருந்தாராம்! ஆனால்?
இயக்குனர் சங்கர் என்றாலே பிரமாண்டம்தான். அவரது இயக்கத்தில் வெளிவந்த படம்தான் பாய்ஸ். நடிகர்கள் சித்தார்த், பரத், நகுல் மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இன்று இவர்கள் அனைவருமே தனி தனியாக பிரபலமாகிவிட்டார்கள். இதில் நடிகை ஜெனிலியா கதாநாயகியாக நடித்திருப்பார்.
பாய்ஸ் திரைப்படம் வெளியாகி பல சர்ச்சைகளை சந்தித்தது, மகளிர் சங்கம் மாதர் சங்கம் என அனைவரும் போர்க்கொடி தூக்கினார்கள். இந்த நிலையில் பாய்ஸ் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
பாய்ஸ் திரைப்படத்தில் முன்ன என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்திருப்பார். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய்யைத்தான் நடிக்க வைக்க நினைத்திருந்தாராம் இயக்குனர் சங்கர்.
ஆனால் அந்த சமயம் விஜய் தமிழன் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், படத்தின் கதையைக் கேட்டுவிட்டு தமிழன் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் தற்போது கால்ஷீட் இல்லை என்று நடிக்க மறுத்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் அந்த படத்தில் தளபதி நடித்திருந்தால் செம மாஸாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.