தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
நடிகை நக்மாவும், ஜோதிகாவும் சொந்த அக்கா - தங்கையே கிடையாது! இது தெரியுமா உங்களுக்கு?
90 கால கட்டங்களில் தமிழ் சினிமாவின் நாயகியாக, பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நக்மா. ரஜினி, கமல், கார்த்திக் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் நடிகை நக்மா.
இந்நிலையில் நடிகை நக்மாவும், நடிகை ஜோதிகாவும் சொந்த அக்கா, தங்கை என்ற தகவல் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. உண்மையாகவே இவர்கள் இருவரும் சொந்த அக்கா - தங்கையா? இருவரும் உடன் பிறந்தவர்களா? என்றால் இல்லை என்பதே உண்மை.
ஜோதிகாவின் உண்மையான சகோதரி, உடன் பிறந்தவர் பெயர் ரோஷினி. ஜோதிகாவின் தந்தை பெயர் சந்தர் சாதனா. சினிமா தயாரிப்பாளரான இவரது முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகை நக்மா. சந்தர் சாதனாவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள்தான் ஜோதிகாவும், ரோஷ்ணியும்.
உறவு முறையில் இருவரும் அக்கா, தங்கையாக இருந்தாலும், இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் இல்லை.