#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹோட்டல் லாக்கரை யூஸ் பண்ணாதீங்க: பணத்தை இழந்த முன்னணி பாடகர் வேதனை.!
ஹிந்தி திரையுலகில் பிரபல முன்னணி பாடகராக இருப்பவர் ராகுல் வைத்யா. இவர் சமீபமாக சத்தீஸ்கர், கோவா, டெல்லி, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இசை திருவிழாவில் கலந்துகொள்ள அடுத்தடுத்து தனது பயணத்தை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் விடுதி ஒன்றில் அவர் தங்கியிருந்த போது, தனது செலவுக்கான பணம் வைத்திருந்த பர்ஸை தவறவிட்டதாகவும், தங்கும் விடுதியில் இருந்த பணம் திருடு போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் விமானத்தில் ஜெய்ப்பூரில் இருந்து பயணம் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் ஹோட்டலில் உள்ள லாக்கரில் உங்களது பணம் போன்றவற்றை வைக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.