காதலர் தினம் - என்ன கலர் ட்ரெஸ் போட்டா என்ன அர்த்தம் தெரியுமா? இதோ!
காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் ஒவொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தவருட காதலர் தினத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன.
புதிதாக காதலை சொல்ல போகும் நபர்கள், காதலை சொல்லிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் நபர்கள் என அனைவரும் காதலர் தினத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் அணிந்திருக்கும் ஆடையை பொறுத்து அவர்கள் காதல்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கூறப்படும். அந்தவகையில்
பச்சை நிற உடை- எனக்கு விருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்
ரோஸ் நிற உடை- இப்பதான் காதலை ஏற்றேன் என்று அர்த்தமாம்
நீல நிற உடை- இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன், இன்னும் கமிட் ஆகவில்லை என்று அர்த்தம்
மஞ்சள் நிற உடை- ஏற்கனவே காதலில் தோல்வியடைந்துவிட்டேன் என்று அர்த்தமாம்.
கறுப்பு நிற உடை – காதல் நிராகரிக்கப்பட்டது என்று அர்த்தம்
ஆரஞ்சு நிற உடை- நிச்சயதார்த்தம் செய்ய ரெடி
சிவப்பு நிற உடை- என்னை விட்டுவிடுங்கள் என்று அர்த்தமாம்.
கிரே கலர் உடை- ஐயோ, எனக்கு இந்த காதலில் இன்ரெஸ்ட் இல்லை
வெள்ளை நிற உடை- நா ஏற்கனவே கமிட் ஆய்ட்டேன்பா, என்ன விட்ருங்க