#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பர்த்டே ஸ்பெஷல்! நடிகர் சிம்புவிற்கு துபாய் அரசு அளித்த பரிசு! என்னனு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டாராக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் சிம்பு. ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் சிம்பு படங்கள் சில வருடங்களாக தோல்வியையே தழுவி வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் மாஸாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
மாநாடு திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாட துபாய்க்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு அவருக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்பு கோல்டன் விசாவை மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், திரிஷா உள்ளிட்ட சில பிரபலங்கள் வாங்கியுள்ளனர்.