"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
நெஞ்சில் கம்பி சொறுகி சோகம்.. லாரி - பேருந்து மோதி நடந்த விபத்தில் பயணி பலி.!
அரசுப்பேருந்து பின்பகுதியில் கம்பி ஏற்றிவந்த லாரி மோதி விபத்திற்குள்ளானதில், பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் நோக்கி, கோவை அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட அரசு பேருந்து, கோயம்புத்தூரில் இருந்து வந்தது.
இதையும் படிங்க: விபத்தில் ஏர் பேக் திறந்தும் பறிபோன பெண்ணின் உயிர்.. மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் சோகம்..!
இந்த பேருந்து சத்தியமங்கலம் அருகே வந்தபோது, வளைவான பகுதியில் திரும்பியுள்ளது. அச்சமயம் பேருந்துக்கு பின்னால் வந்த லாரி கம்பி பாரம் ஏற்றிவந்த நிலையில், வளைவில் ஒன்றுக்கொன்று மோதி விபத்தில் சிக்கியது.
பயணி பலி., 11 பேர் படுகாயம்
இவ்விபத்தில் பேருந்தின் பின்பக்கம் அமர்ந்து இருந்த 10 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒரு பயணி மட்டும் நெஞ்சில் கம்பி குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார் என கூறப்படுகிறது. மேலும், லாரி ஓட்டுனரும் காயமடைந்தனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவரின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: லாரியை முந்திச்செல்ல முயன்று விபரீதம்; 7ம் வகுப்பு மாணவர் தாய் கண்முன் உடல் நசுங்கி பலி.!