இவன் தான் அந்த சார் - போஸ்டருடன் களமிறங்கிய திமுக எம்.எல்.ஏக்கள்..!



Yaar Antha Sir Issue DMK MLA Says Ivanthan Antha Sir 

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 19 வயது மாணவி, ஞானசேகரன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தற்போது இந்த விஷயம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தின் நேரடி கணக்கணிப்பில் விசாரணை நடத்தி வருகிறது. புகார் பெறப்பட்ட 24 மணிநேரத்தில் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஞானசேகரன் புழல் சிறையில் இருக்கிறார். இவர் திமுகவை சேர்ந்தவர் என அதிமுக, பாஜக கட்சிகள் கூறுகின்றன. அமைச்சர்களுடன் ஞானசேகரன் எடுத்த புகைப்படமும் வெளியானது. இவரை அனுதாபி என சட்டப்பேரவையில் முதல்வரும் அறிவித்து, அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும், அந்த சார் யாராக இருந்தாலும் உரிய தண்டனை கிடைக்கும் என தெரிவித்து இருக்கிறார். 

யார் அந்த சார்?
இந்த விஷயத்தில், ஞானசேகரன் தான் அழைக்கும்போதெல்லாம் போனில் பேசும் சாருடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் என் மிரட்டி இருக்கிறார். இந்த விஷயம் மாணவியின் எப்.ஐ.ஆர் தகவல் வெளியான பின்னர் தெரியவந்தது. இதனால் ஞானசேகரன் கூறிய சார் யார்? என அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கும் யார் அந்த சார்? என பேட்ச் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர். 

இதையும் படிங்க: #Breaking: "யார் அந்த சார்" - ஆர்.எஸ் பாரதி பதிலால் பரபரப்பு.! 

Yaar Antha Sir

அதிமுக - திமுக நேரடி மோதல்

இதனிடையே, சென்னை அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்த 10 வயது சிறுமி பலாத்கார விவகாரத்தில், குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக வட்ட செயலாளர் சுதாகர், சிறுமியின் பெற்றோரரை காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி, அப்பாவி சிறுவன் ஒருவரை வழக்கில் கைது செய்ய வைத்துள்ளார். இதற்கு உடந்தையாக காவல் ஆய்வாளர் ராஜியும் செயல்பட, சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்திற்கு சென்று நடந்த சிபிஐ விசாரணையில், இந்த தகவல் அம்பலமானது. இந்த விஷயத்தில் சுதாகர், ராஜி சிறையில் உள்ளனர். 

இவன் தான் அந்த சார்

இந்நிலையில், இந்த விஷயத்தை தனக்கு சாதகமாக்கிய திமுக தரப்பினர், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுக யார் அந்த சார்? என்ற கேள்விக்கு, அண்ணா நகரில் சிக்கிய அதிமுக பிரமுகர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பயன்படுத்தி, இவன் தான் அந்த சார் என்ற தகவலை பகிர்ந்து வைக்கின்றனர். நேற்று திமுக ஆதரவாளர் தொடங்கிய போஸ்டர் வேலை, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் இன்று பேசுபொருளாக்கப்பட்டுள்ளது. 

 

 
 

 

 

இதையும் படிங்க: #Breaking: சட்டப்பேரவையில் மெகா சம்பவம்.. "யார் அந்த சார்?" - அதிமுகவினர் பேட்ச் அணிந்து வருகை.!