என்னை குற்றவாளி ஆக்கிடாதீங்க.. சிவகங்கை காவல்துறைக்கு கடற்படை வீரர் எச்சரிக்கை.. காரணம் என்ன?



a Navy Officer Warning to Sivagangai Police 

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர் கோவில் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒய்யம்மை (வயது 65), கடந்த 12.01.2024 அன்று வீட்டில் இருந்து மாயமாகி, பின் அவரின் சடலம் மீட்கப்பட்டது. 

இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஓராண்டாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மூதாட்டி நகைக்காக மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டு இருந்தார். 

இதையும் படிங்க: ஈரோடு: வேகத்தடையில் இளைஞருக்கு காத்திருந்த எமன்; வேலைக்கு சென்று வரும்போது சோகம்.!

குற்றவாளியை கைது செய்ய மூதாட்டியின் மகன் பலமுறை காவல் நிலையத்தில் மனு அளித்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது. தற்போது மூதாட்டியின் பேரன் இளமாறன், கப்பற்படையை வீரராக பணியாற்றி வருகிறார். 

இவர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றபோதே, அவரது பாட்டியின் மரணமும் நிகழ்ந்தது. இதனால் ஓராண்டாகியும் குற்றவாளியை அதிகாரிகள் கைது செய்ய வில்லை என்பதை வருந்தி, அவர் ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், மூதாட்டி கொலை செய்யப்பட்டு ஓராண்டாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. உங்களின் வீட்டில் இப்படி மரணம் நடந்தால் விட்டுவிடுவார்களா? குற்றவாளியை கைது செய்யாமல் காவல்துறை என்ன செய்கிறது? என்னை குற்றவாளி ஆக்கி விடாதீர்கள் என கூறியுள்ளார். 

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: திருச்சி: "போலீசை கூப்டு.. என்னடா பண்ணுவ?" - நடுரோட்டில் முதியவரின் நெஞ்சில் மிதித்து தாக்குதல்..!