பிரபல நடிகைக்கு குறைந்துபோன படவாய்ப்பு! எருமை மாடு வாங்கி தொழில் தொடங்கிய சம்பவம்!



Famous malaiyalam actress manju pillai starts buffalo farm

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் எருமை மாடுகள் வாங்கி வளர்த்து வரும் சம்பவம் நடந்துள்ளது.

சீனாவின் உஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழில் துறைகள் முடங்கியுள்ளது.

மேலும் கொரோனா ஊரடங்கினாள் பலர் வேலை இழந்து, சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மஞ்சு பிள்ளை. இவர் பல்வேறு சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடிகையாக நடித்துள்ளார்.

Manju Pillai

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் இவருக்கும் பட வாய்ப்புகள் இல்லை. இதனால் அன்றாடம் செலவிற்கே மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏதாவது தொழில் தொடங்கலாம் என நினைத்த மஞ்சு பிள்ளை எருமை மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளார். 

இதனையடுத்து ஹரியானாவில் இருந்து தரமான எருமை மாடுகளை இறக்குமதி செய்து சுமார் 20 எருமை மாடுகளுக்கு மேல் வைத்து தற்போது பிசினஸ் செய்து வருகிறாராம். சினிமாவில் வரும் வருமானத்தை விட இதில் நல்ல வருமானம் வருகிறது என்பதால் இந்தத் தொழிலையே தொடர்ந்து செய்யலாம் என அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.