#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிகப்படியான இளம் ரசிகர்களை கவர்ந்த பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேசமயம் குறைந்த நபர்களைக் கொண்டு சீரியல் ஷூட்டிங் நடத்த இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி, ரன் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
மேலும், இது குறித்து நவ்யா சாமி கூறுகையில், எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் நடிகைகள் எனக்கு உறுதுணையாக உள்ளனர். இதை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.