#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கண்ணகி படத்தை பார்த்துவிட்டு, பெண்மணி உணர்ச்சிபொங்க செய்த நெகிழ்ச்சி செயல்: ஆனந்த கண்ணீரில் ததும்பிய தருணம்.!
இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணகி. இப்படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப் மற்றும் ஷாலின் ஜோயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தில் இடம்பெற்ற பாடல், டிரைலர் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. படம் வரும் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது.
இன்று படத்தின் பிரீமியர் ஷோ இன்று திரையிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த பெண்மணி ஒருவர் உணர்ச்சி வெள்ளத்தில் பொங்கி நடிகை ஷாலின் ஜோயவை கட்டியணைத்து தனது கண்ணீரை அவர்களுக்கான பதிலாக வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிகழ்வை படம்பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை, நான் எனது வாழ்நாளில் உங்களை மறக்கவே மாட்டேன். நான் மகிழ்ச்சியாக, ஆசிர்வதிக்கப்பட்டதாக உணருகிறேன் என கூறியுள்ளார்.
I will never ever ever forget this day in my life! This was the very first special show and this was the very first response. I will never forget you mam, The way you stood up and and said “I want to hug you’!” and the way you cried. Alhamdullillah I’m grateful❤️ pic.twitter.com/RrRP2oT5tn
— Shaalin Zoya (@shaalinofficial) December 12, 2023