கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஆத்தாடி.. இப்படியொரு தீவிர ரசிகரா! பிரபல ஹீரோவுக்காக திடீரென ஆற்றுக்குள் குதித்த இளைஞர்! ஏன்னு பார்த்தீர்களா
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்த, நடிகை சமந்தாவின் கணவர் நடிகர் நாக சைதன்யா. அவர் பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுன் மகன் ஆவார். இவர் தெலுங்கில் ஏராளமான மாஸ் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக உள்ளார். மேலும் அவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் நாகசைதன்யா அண்மையில் தேங்க் யூ என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இந்த ஷூட்டிங் கிழக்கு கோதாவரி பகுதியில் நடைபெற்று வந்தது. அந்தப் படத்துக்காக நாகசைதன்யா படகு ஓட்டுவது போன்ற காட்சி எடுக்கப்படவிருந்தது. அதற்காக அவர் படகு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அங்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டங்கள் திரண்டன.
Neekuna fanism ki avadhulu levu Anna @chay_akkineni ❤️🙏
— Aarya Prasad (@Aaryaprasad) March 2, 2021
Ne cult fanism level veru anthe 💥🤙#ThankYouTheMovie#LoveStoryOnApril16th pic.twitter.com/ImJjKZ4HOj
இந்தநிலையில் நாகசைதன்யாவின் படகு பாலத்திற்கு அடியில் வந்தபோது அவரை காண வேண்டுமென்ற ஆர்வத்தில் ரசிகர் ஒருவர் திடீரென ஆற்றுக்குள் குதித்துள்ளார். இதனைக் கண்டு நாகசைதன்யா அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் மற்றொரு படகில் அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டனர். அதனைத் தொடர்ந்து நாகசைதன்யா அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அது வைரலாகி வருகிறது.