#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழக ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்த நடிகை ராதிகா! அதிர்ச்சி காரணம்!
இந்திய அளவில் சன் தொலைக்காட்சி முதல் இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்துவந்த சீரியல் தற்போது இனளஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் பார்க்க தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு சீரியல்கள் மக்கள் இடத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.
சன்டிவியில் இரவு 9.30 மணி என்றாலே ராதிகாவின் தொடர்தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்தது. கண்ணின் மணி,கண்ணின் மணி நிஜம் கேளம்மா.. என்று 18 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீடுகளிலும் ஒலித்த பாடல்தான் ராதிகாவின் சித்தி.
இதுவரை சித்தி,அண்ணாமலை,செல்வி, செல்லமே, வாணிராணி,சந்திரகுமாரி என 6850 எபிசோட் நடித்துள்ளார் நடிகை ராதிகா. இவரின் நடிப்பின் திறமையால் முக்கால்வாசி தமிழ் மக்கள் இவருக்கு ரசிகர்களாய் உள்ளனர்.
இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்களின் நேரம் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த சந்த்ரகுமாரி தொடர் கடந்த 18 ஆம் தேதியில் இருந்து மாலை 6 : 30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சந்த்ரகுமாரி தொடரை பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்தும் வருகிறார். ஆனால் அந்த சீரியல் மாலை 6 : 30 மணிக்கு மாற்றப்பட்டதிலிருந்து இன்றுவரை அந்த தொடரில் காணாமல் போன கதாபாத்திரமாக நடித்துவருகிறார். இந்த தொடரின் மாற்றத்தால் தான் அவர் நடிக்கவில்லை என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. பல ரசிகர்கள் நடிகை ராதிகா நடிக்கும் சீரியல் தான் எங்களுக்கு வேண்டும் எனவும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.