கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தீபாவளி விடுமுறை ஷாக்.. விமான கட்டண விலை கிடுகிடு உயர்வு..!
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பெருவாரியாக சிறப்பிக்கும் தீபாவளி பண்டிகை, தமிழ்நாட்டில் அக்.31 அன்று கொண்டாடப்படுகிறது. இன்னும் 1 நாட்களே எஞ்சியிருக்கும் வேளையில், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி உட்பட வெளிமாநிலத்தில் இருந்து பணியாற்றுவோரும், மாநிலத்திற்கும் வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றுவோரும் சொந்த ஊர் செல்ல தொடங்கியுள்ளனர்.
இவர்களின் பயண வசதிக்காக அரசு சார்பில் இரயில், பேருந்து போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தொடர்ந்து அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சொந்த ஊர் சென்றோர் பணியிடத்திற்கு திரும்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில அளவில் முதல் முறையாக தனியார் பேருந்துகளும் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: விவசாயிகளே உஷார்.. தீபாவளி செலவுக்கு குடிமகன்கள் டார்கெட்.. மோட்டார் பம்புகள் கவனம்.!
கட்டணம் உயர்வு
இந்நிலையில், சென்னை உட்பட பெருநகரங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கான விமான கட்டணங்கள் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது விமான பயணிகளிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பேருந்துகளில் பொதுவாக இவ்வாறான கட்டண உயர்வு என்பது பண்டிகை காலங்களில் வாடிக்கை எனினும், சமீபகாலமாக விமானத்திலும் டிக்கெட் உயர்த்தி கொள்ளையடிக்கப்படுகிறது.
Pictureசென்னை - மதுரை டிக்கெட் விலை பட்டியல் அக். - நவம்பர் மாதம் 2024
அதன்படி, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக ரூ.4100 வசூலிக்கப்படும் நிலையில், இன்று குறைந்தபட்சமாக ரூ.8900 முதல் அதிகபட்சமாக ரூ.13300 வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோல, கோவைக்கு வழக்கமாக ரூ.3400 வசூலிக்கப்படும் நிலையில், இன்று குறைந்தபட்சமாக ரூ.7800 முதல் அதிகபட்சமாக ரூ.13400 வரை வசூலிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை விலை உயர்வு
சேலத்திற்கு வழக்கமாக ரூ.3300 வசூலிக்கப்படும் நிலையில், இன்று குறைந்தபட்சமாக ரூ.8300 முதல் அதிகபட்சமாக ரூ.10800 வரை வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு அதிகபட்சமாக ரூ.12000 வரை வசூலிக்கப்படுகிறது. திருச்சிக்கு வழக்கமாக ரூ.2300 வசூலிக்கப்படும் நிலையில், இன்று குறைந்தபட்சமாக ரூ.8200 முதல் அதிகபட்சமாக ரூ.10500 வரை வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமாக ரூ.2500 வசூலிக்கப்படும் நிலையில், இன்று குறைந்தபட்சமாக ரூ.4600 முதல் அதிகபட்சமாக ரூ.6500 வரை வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவுக்கு சாதாரண நாட்களில் ரூ.4600 என்ற அளவில் இருந்த கட்டணம் தற்போது ரூ.13100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஹைதராபாத்துக்கு ரூ.7900, அந்தமானுக்கு ரூ.10800, திருவனந்தபுரத்திற்கு ரூ.9800 முதல் ரூ.18000 என அந்தந்த பகுதிகளின் தேவைக்கேற்ப டிக்கெட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நல்லபடியா இறங்கிட்டா போடும்.. திருச்சியில் மறுமுறை இறங்கிய ஷார்ஜா விமானம்.. கொண்டாடிய இளைஞர்கள்.!