#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது, என்ன குழந்தை தெரியுமா - சந்தோஷத்தில் கணவர் போட்ட ட்வீட்.
14 வயதில் சினிமாத்துறையில் நுழைந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருப்பவர் சுஜா வருணி . நாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் இவர் அதிகமாக நடனமாடி இருக்கிறார்.
இதை தொடர்ந்து திரையுலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருந்த சுஜா வருணி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவகுமாரும் 10 ஆண்டுகளாக காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த ஆண்டு இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் சுஜா வருணி கர்ப்பமாக உள்ளார் என மிகவும் மகிழ்ச்சியுடன் புகைப்படம் ஒன்றை சிவகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தொடந்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது சுஜா நேற்று மாலை அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த நிகழ்வை குறித்து அவரது கணவர் சிவகுமார் கூறியது, என்னுடைய சிம்பா வந்துவிட்டான்.விரைவில் உங்களை எல்லாம் பார்ப்பான் என கூறியுள்ளார்.
Finally!It's a BOY , My SIMBA has finally arrived & will be seeing you all soon🤙 This day August 21st will always be an unforgettable day to me, because it's the day of my Webseries FINGERTIP release on Zee5 and my son coming into this world 💗 pic.twitter.com/ZJOW74sBAr
— Shiva Kumar (@Shivakumar3102) August 21, 2019