கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மரணத்தில் முடிந்த லிவிங் டுகெதர் உறவு.!! ஆசிரியைக்கு நேர்ந்த துயர முடிவு.!!
திருப்பூர் மாவட்டத்தில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவருடன் விவாகரத்து
திருப்பூர் மாவட்டம் ஸ்கை கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் நர்மதா(48). இவர் பல்லடம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு சூலூர், பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த பாலசுந்தரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன் தனது கணவனை பிரிந்த நர்மதா மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
ரியல் எஸ்டேட் அதிபருடன் லிவிங் டுகெதர்
இந்நிலையில் ஆசிரியை நர்மதா சரவணம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான மணிகண்டன்(40) என்பவருடன் பழகி வந்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மணிகண்டனுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி இருக்கிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மணிகண்டன், நர்மதா மற்றும் நர்மதாவின் மகள் ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் மணிகண்டன் மற்றும் நர்மதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த குழாயடி சண்டை.!! இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட மூதாட்டி மரணம்.!!
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை
இந்நிலையில் மணிகண்டன் மற்றும் நர்மதா ஆகியோரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தனது அறைக்குள் சென்ற நர்மதா நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கதவைத் தட்டி இருக்கிறார். அப்போது நர்மதா திறக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறார் நர்மதா. இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நர்மதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "சாராயக்கடையை மூடுங்க".. 10 வயதுசுல இருந்து என் பிள்ளை குடிக்கிறான் - தாய் கண்ணீர் குமுறல்.!