#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முத்த காட்சியா.! வேண்டுமென்று பல டேக் வாங்கிய ஜிவி பிரகாஷ்.. கலாய்த்த இயக்குனர்.?
இசையமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் நடித்துள்ள "அடியே" திரைப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஜி.வி யின் நண்பரும், இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் ஜி .வி யுடன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது தொகுப்பாளர், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஜி.வி யின் மனசாட்சியாக மாறி பதில் சொல்லவேண்டும் என்று கூறினார். அதன்படி தொகுப்பாளர் "பேச்சுலர் திரைப்படத்தில் வரும் முத்தக்காட்சியில் எதனை டேக் போனீர்கள் ?" என்று கேட்டார்.
அதற்கு ஜி.வி யின் மனசாட்சியாக ஆதிக், "நான் பொதுவாகவே சிங்கிள் டேக்கில் நடிக்கமாட்டேன். காட்சி உண்மையாக வரவேண்டும் என்று நிறைய டேக் போவேன். அந்த முத்தகாட்சிக்கு சுமார் 63 டேக் எடுத்திருப்பேன்" என்று கூறினார். இதைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் வயிறு குலுங்க சிரித்தனர்.