#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. கொள்ளை அழகில் ஜொலிக்கிறாரே.! வருங்கால கணவருடன் ரொமான்டிக்காக போஸ் கொடுத்த ஹன்சிகா.! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா . கொழுகொழுவென செம க்யூட்டாக இருந்த அவரை ரசிகர்கள் சின்ன குஷ்பு என செல்லமாக அழைத்தனர். மேலும் நடிகை ஹன்சிகா பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஹன்சிகாவிற்கு தொழிலதிபர் ஹோஹைல் கதூரியா என்பவருடன் டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் ஹன்சிகா தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் திருமண நாள் நெருங்கிவிட்டதால் அதுதொடர்பான சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹன்சிகா சிவப்பு புடவையில் கொள்ளை அழகில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.