#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செம ஹேப்பி.. அழகான புகைப்படத்துடன் ஹர்பஜன் சிங் கொடுத்த சர்ப்ரைஸ்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ஹர்பஜன் சிங் தான் மீண்டும் அப்பாவான மகிழ்ச்சியான செய்தியை புகைப்படத்துடன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஹர்பஜன் சிங். இவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோதே தனது தமிழ் ட்வீட்டுகளால் செம பிரபலமாகி ஏராளமான தமிழக ரசிகர்களைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து கிரிக்கெட்டில் இருந்து சினிமாவில் களமிறங்கிய ஹர்பஜன்சிங் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் எழுதி இயக்கும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடித்துள்ளார். இந்நிலையில் பிரண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துள்ளனர்.
Coming soon.. July 2021 ❤️ pic.twitter.com/LmCVs3qIy9
— Geeta Basra (@Geeta_Basra) March 14, 2021
ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பாஸ்ரா. இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் கீதா பாஸ்ரா தற்போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக உள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அழகான புகைப்படத்துடன் அவர் பகிர்ந்துள்ளார் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.