#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என் மாரு மேல சூப்பர் ஸ்டாரு.. அட ஹர்பஜன் சிங் செய்துள்ள வேலையை பார்த்தீங்களா!! வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் ரஜினி. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர்.
இந்த நிலையில் டிசம்பர் 12 நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதனை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வந்தனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் வழக்கம் போல தனது ஸ்டைலில் தமிழில் நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
"என் மாருமேல சூப்பர் ஸ்டார்"
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 12, 2021
80's பில்லாவும் நீங்கள் தான்
90's பாட்ஷாவும் நீங்கள் தான்
2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDSuperstarRajinikanth #SuperstarRajinikanth #ரஜினிகாந்த் pic.twitter.com/Tstolu51RB
அவர் தன் ட்விட்டரில், தனது மார்பில் ரஜினியின் புகைப்படத்தை டாட்டூ குத்தியிருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அதில், என் மாருமேல சூப்பர் ஸ்டார்' 80's பில்லாவும் நீங்கள்தான், 90's பாட்ஷாவும் நீங்கள்தான், 2k அண்ணாத்த நீங்கள்தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா என வாழ்த்து கூறியுள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.