#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.. லாஸ்லியாவை இந்த நடிகரும் காதலிக்கிறாரா!! அப்பட்டமாக போட்டுடைத்த ஹர்பஜன் சிங்.! ஷாக்கில் ரசிகர்கள் !!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவருக்கு பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்களிலேயே ஆர்மி உருவானது. ஆனால் நாளடைவில் அவர் தனது சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி பல விமர்சனங்களுக்கு ஆளானார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அவர்கள் இருவருமே அவரவர் வேலையை பார்த்து வருகின்றனர். மேலும் லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் நகைச்சுவை கேரக்டரில் சதீஷ், குக் வித் கோமாளி பாலா மற்றும் வில்லனாக பிரபல நடிகர் அர்ஜுனும் நடிக்கின்றனர்.
மச்சி என்ன இப்பிடி பச்சயா பொய் சொல்ற நீ #Losliya வை தான லவ் பன்றேன்னு சொன்ன.. அன்னிக்கு இந்த விஷயம் தெரியுமா ?? #FriendshipMovie #FriendshipSummer ,😜 நம் நட்பு என்றும் தொடரும் தோழா https://t.co/9RonGKhMl2
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 20, 2021
இந்த நிலையில் சதீஷ் சமீபத்தில் படக்குழுவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, என்றும் தொடரும் இந்த பிரண்ட்ஷிப் லவ் யூ என பதிவிட்டு அதனை ஹர்பஜன், லாஸ்லியா மற்றும் சிலருக்கு பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் ஹர்பஜன் அதற்கு பதிலளிக்கும் வகையில், மச்சி என்ன இப்பிடி பச்சையா பொய் சொல்ற. நீ லாஸ்லியாவை தானே லவ் பண்றேன்னு சொன்ன அன்னிக்கு.. அந்த விஷயம் தெரியுமா? என்று கிண்டலாக கோர்த்து விட்டு நம் நட்பு என்றும் தொடரும் தோழா என்று பதிவிட்டுள்ளார்.
அது வைரலாகி வருகிறது