#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரஜினி, கமல் தெரியும்! விஜய் யார்னு தெரியுமா? பிரபல கிரிக்கெட் வீரர் பதில்!
தமிழ் சினிமாவின் தளபதி விஜய். தமிழ் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் தனக்கென ஏகப்பட்ட ரசிகர்களை வைத்துள்ளார் விஜய். தற்போது மூன்றாவது முறையாக அட்லீயுடன் கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார் விஜய்.
மெர்சல், சர்க்கார் படத்திற்கு பிறகு விஜயின் புகழ் மேலும் அதிகரித்துள்ளது. சர்க்கார் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய்க்கு ஆசியாவிலேயே சிறந்த நடிகர் என்று IARA அமைப்பு விருதை கூட வழங்கியது. இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் பிரபல தமிழ் நடிகர்களை பற்றி பேசியுள்ளார்.
சென்னை அணிக்காக ஹர்பஜன் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து அவ்வப்போது தமிழில் பேசி தமிழ் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழ் யூடுயூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் தமிழ் நடிகர்கள் பற்றி கேட்கப்பட்ட போது, தமிழ் ‘எனக்கு ரஜினி, கமல் இருவரையும் நன்றாக தெரியும், அவர்களின் நிறைய படங்களை பார்த்துள்ளேன். அதே நேரம் விஜய்யை பற்றி எனக்கு தற்போது நன்றாக தெரியும். அவர் ஒரு சிறந்த நடிகர் என்று கூறியுள்ளார்.