இப்படியொரு பிரச்சினையா? விஜய் சேதுபதி படகுழுவினருக்கு அபராதம் விதிப்பு! அதுவும் ஏன்னு பார்த்தீர்களா!!



health-department-fined-to-vijay-sethupathi-movie

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவ துவங்கிய கொரோனா நோய் தொற்று ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் ஒரு நாளைக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொன். ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் பழனியை அடுத்த காரமடைப் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

vijay sethupathi

அதை அறிந்த ஊர்மக்கள் அங்கு அதிகளவில் குவிந்தனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படக்குழுவினர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் படக்குழுவிற்கு ரூ.1500 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.