ரியல் ஹீரோவா இருங்க.. நடிகர் விஜய்யை கண்டித்து அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!



highcourt-ordered-1-lakhs-benality-to-vijay

நடிகர் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் ஒன்றினை இறக்குமதி செய்திருந்தார். இந்நிலையில்,  அந்த சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடைகோரி விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 அந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் சமூக நீதிக்காக பாடுபடுவது போல பிரதிபலிக்கும் இத்தகைய புகழ்பெற்ற நடிகர்கள் இவ்வாறு வரி ஏய்ப்பு செய்வது முறையல்ல.  நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. மேலும் வரி என்பது நன்கொடையல்ல. கட்டாய பங்களிப்பு என்று கூறியுள்ளனர்.

vijay

மேலும் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை இரு வாரங்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.