#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தி கிரே மேன்.. ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி? உற்சாகத்துடன் மனம் திறந்த நடிகர் தனுஷ்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவர் ஹாலிவுட் சினிமாவில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தி கிரே மேன் படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட் பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷிடம் தி கிரே மேன் படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இந்தப் படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என எனக்கே தெரியவில்லை. நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் நிறுவனத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. பெரிய ஆங்கில படம், விரைவில் பதில் கூறுங்கள் எனக் கேட்டனர்.
பின்னர், படத்தைக் குறித்த முழு தகவலும் கேட்ட பிறகு உடனே சம்மதம் தெரிவித்து விட்டேன். இதனை விட பெரிதாக வாய்ப்பு எனக்கு கிடைக்காது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனக் கூறியுள்ளார்.