#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"10 வருஷம் பொறுக்க முடியாது., அவனை ரயில்ல தள்ளிவிடுங்கள்" - மாணவி சத்யா கொலை விவகாரத்தில் கொந்தளித்த நடிகர் விஜய் ஆண்டனி..!!
சென்னையில் உள்ள கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியைச் சார்ந்த கல்லூரி மாணவி சத்யா என்பவரை ஒருதலையாக காதலித்து வந்த சதீஸ் என்ற இளைஞன், பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே மீண்டும் அதிரவைத்த நிலையில், கல்லூரி மாணவி சத்யா உடல்நசுங்கி தலை துண்டிக்கப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சதீஷை கைது செய்த நிலையில், மகள் இறந்துபோன துக்கத்தில் சத்யாவின் தந்தையான மாணிக்கம் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதை தொடர்ந்து, நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதங்கத்துடன் முக்கிய பதிவை பதிவு செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில், "சத்யாவை கொலைசெய்து அவரது தந்தையின் தற்கொலைக்கு காரணமாக இருந்த சதீஷை பொறுமையாக விசாரணை செய்து பத்தாண்டுகளுக்கு பின்னர் தூக்கில் போடாமல், தயவுசெய்து உடனடியாக விசாரித்து ரயிலில் தள்ளிவிட்டு தண்டிக்க வேண்டும் என சத்யாவின் சார்பாக பொதுமக்களில் ஒருவனாக நீதிபதிகளை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்🔴 pic.twitter.com/b8h5CPb4hg
— vijayantony (@vijayantony) October 14, 2022