கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"நம்ம புள்ளய கொன்னவன் கூட கள்ள தொடர்பு கேக்குதோ..." காதலனுக்கு அரிவாள் வெட்டு.!! அண்ணன், கணவன் கைது.!!
கோவையில் தம்பியை கொலை செய்த நபருடன் தங்கை கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில், அண்ணன் மற்றும் கணவர் இணைந்து கள்ளக்காதலன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சகோதரியின் கள்ளத்தொடர்பு
கோவை மாவட்டம் குரும்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சித்திரை குமார். இவருக்கு தேவிகா என்ற சகோதரியும் ஜெகன்ராஜ் என்ற தம்பியும் இருந்தனர். தேவிகாவிற்கு முருகன் என்ற நபருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தேவிகாவிற்கு மதன்ராஜ் என்ற நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களது கள்ளத்தொடர்பை சகோதரர்கள் எதிர்த்து வந்துள்ளனர். இது தொடர்பாக மதன்ராஜ் மற்றும் தேவிகாவின் குடும்பத்திற்கு இடையே பகை ஏற்பட்டிருக்கிறது.
தம்பியை கொன்ற கள்ளக்காதலன்
இந்த சூழலில் சகோதரி தேவிகாவுடனான உறவை கைவிடுமாறு மதன்ராஜை, ஜெகன்ராஜ் எச்சரித்திருக்கிறார். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஜெகன்ராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மதன்ராஜை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மதன்ராஜ் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ள தொடர்பு.. கணவன், குழந்தை கொலை.!! பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!! காதலன் ரிலீஸ்.!!
கொலைவெறி தாக்குதல்
இதனையடுத்து தனது கள்ளக்காதலி தேவிகாவை பார்ப்பதற்காக மீண்டும் வந்திருக்கிறார் மதன்ராஜ். இது சித்திரை குமார் மற்றும் தேவிகாவின் கணவனை மேலும் கோபப்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தம்பியின் கொலைக்கு பழிவாங்கவும் தங்கையின் கள்ளக்காதலுக்கு முடிவு கட்ட வேண்டும் என நினைத்த சித்திரை குமார், தேவிகாவின் கணவர் முருகனுடன் சேர்ந்து மதன்ராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதன்படி சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மதன்ராஜை பதுங்கி இருந்த சித்திரை குமார் மற்றும் முருகன் ஆகியோர் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மதன்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சித்திரை குமார் மற்றும் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "என் மகள இப்படி பண்ணிடீங்களே" 14 வயது சிறுமி கூட்டு கற்பழிப்பு.!! கதறிய தந்தை.!!