கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: சென்னையில் போதைப்பொருள் சாம்ராஜ்யம்.. ரியல் "கோலமாவு கோகிலா" கைது., திரைப்படத்தை மிஞ்சும் உண்மை உள்ளே.!
திரைப்படத்தை மிஞ்சும் வகையில் தந்தை சிறை சென்றபின், மகளும் தந்தையின் பாணியில் போதைப்பொருளை விற்பனை செய்து தற்போது சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வந்த நிலையில், அதனை ரகசியமாக கண்காணித்து கடத்தல் கும்பலை கைது செய்ய சென்னை மாநகர ஆணையர் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக்குழு போதைப்பொருள் கடத்தல் கும்பலை தீவிரமாக கண்காணித்து கைது நடவடிக்கை செய்து வருகிறது.
இதையும் படிங்க: பெண் காவலர்கள் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; நடந்தது என்ன? வெளியான ஆடியோ.!
கடத்தல் கும்பல் தலைவி கைது
இதனிடையே, நேற்று சிறப்புக்குழு அதிகாரிகள் உயர் நீதிமன்றம் அருகில் வைத்து 6 பேர் கும்பலை மடக்கிய நிலையில், 2 பேர் தப்பியோடினர். 4 பேர் கும்பலை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவியான மணலி பகுதியை சேர்ந்த மௌஸியா (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.
இளைஞர்கள், மாணவர்கள் டார்கெட்
இவர் இளைஞர்கள், இளைஞிகள், பப்களுக்கு வரும் நபர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது அம்பலமானது. கைதான மௌசியாவின் தந்தை அக்பர் அலி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைதாகி, 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்.
தந்தை கைதுக்கு பின் தொழில் அறிமுகம்
தந்தை கைதானதும் அவரின் தொழிலை கையில் எடுத்த மகள், தந்தையின் பழக்கத்தை வைத்து போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளார் என்பது அம்பலமானது. இவரிடம் தொடர் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றனர். விரைவில் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 26 வயது செவிலியருடன் பலமுறை உல்லாசம்; திருமணம் செய்ய மறுத்த டாக்டரை கம்பி எண்ண வைத்த காதலி.!