கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
முன்னாள் பெண் போலீசை ஏமாற்றிய இன்ஸ்டா பிரபலம்.. எப்.ஐ.ஆர் போட்டதும் தலைமறைவு.!
ஜிம்மில் அறிமுகமான பாடி பில்டரால் முன்னாள் காவல் அதிகாரி ஏமாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம், 22 வது தெருவில் வசித்து வருபவர் திலீப் குமார். இவர் ஜிம் பயிற்சியாளர். டெல்டா திலீப் என்றால் இன்ஸ்டாகிராமில் மிகப்பிரபலமான நபராக திலீப் குமார் வலம்வந்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ஐஸ்வர்யா மால்-ஐ வாரித்தூற்றிய பொதுமக்கள்.. ஆபர் அறிவிப்பு கேன்சலால் குமுறும் மக்கள்.. கொக்கரிப்பு.!
இவருக்கு திருமணம் முடிந்து திவ்யா என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணா நகர் ஜிம்மில் திலீப் வேலை பார்த்துவந்தபோது, அங்கு சுந்தரவள்ளி என்ற பெண் காவலர் பயிற்சிக்கு சேர்ந்துள்ளார்.
ஜிம்மில் மலர்ந்த காதல்
கடந்த 2016ல் சுந்தரவள்ளி தனது பணியையும் துறந்து இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே 2 திருமணம் முடிந்து விவாகரத்து கிடைத்து, ஒரு மகளுடன் வசித்து வருகிறார் என கூறப்படுகிறது. இதனிடையே, திலீப் - சுந்தரவள்ளி ஜிம்மில் நட்பாக பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
ஒருகட்டத்தில் எனது மனைவி அழகாக இல்லை என்பதால், அவரை விவாகரத்து செய்து உன்னையே திருமணம் செய்கிறேன் என சுந்தரவள்ளியிடம் காதல் மழையை பொழியவைத்து இருக்கிறார். இதனால் 2022 ல் திருமங்கலம் பகுதியில் இருக்கும் கோவிலில் திலீப் - சுந்தரவள்ளி ஜோடி திருமணம் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
ரூ.15 இலட்சம் பணம் பறிப்பு
முதல் மனைவி திவ்யாவை விவாகரத்து செய்ய ரூ.30 இலட்சம் பணம் வேண்டும் எனவும் திலீப் கேட்க, முதல் தவணையாக ரூ.5 இலட்சம், இரண்டாவதாக ரூ.10 இலட்சம் என ரூ.15 இலட்சம் பணம் சுந்தரவள்ளி கொடுத்துள்ளார். விவாகரத்து பத்திரம் என பெயரளவுக்கு தாள்களை காண்பித்த திலீப், சுந்தரவள்ளியுடன் குடித்தனம் நடத்த காலம் தாழ்த்தி இருக்கிறார்.
பணம் மட்டுமே சுந்தரவள்ளியிடம் இருந்து கேட்க, 2 ஆண்டுகள் ஆகியும் திவ்யாவிடம் இருந்து விவாகரத்து வாங்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது திலீப் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஒருகட்டத்தில் திலீப்பின் தாயிடம் கோரிக்கை முன்வைக்கச் சென்றபோது, சுந்தரவள்ளி திலீப்பின் தாயை தாக்கி இருக்கிறார்.
திலீப் மீது வழக்குப்பதிவு
இதனால் நேரில் வந்த காவலர்கள் சுந்தரவள்ளியை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தியும் பலனில்லை. ஒருகட்டத்தில் வாக்குவாதம் செய்து அதிகாரிகளையும் அடிக்கப் பாய்ந்த காரணத்தால், சுந்தரவள்ளி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
விடுதலையான கையுடன் சுந்தரவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் 3 பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த தகவலை அறிந்த திலீப்குமார் தலைமறைவாகியுள்ளார். இதனால் விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: #Breaking: புதிய உச்சம் தொடப்போகும் தங்கம், வெள்ளி விலை.. இன்று கிடுகிடு உயர்வு.!