"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
அதிவேகத்தால் சோகம்.. சைக்கிளில் சென்ற 12ம் வகுப்பு மாணவி பேருந்து மோதி பலி.. சென்னையில் துயரம்.!
தனியார் பேருந்து மோதியதில் 12ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வரும் மாணவிகள் மஞ்சுளா, தீதித்யா. இவர்கள் இருவரும் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்கள்.
இதையும் படிங்க: #JustIN: பெட்ரோல்-டீசல் விலை இன்று குறைவு... இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் இதோ.!
இதனிடையே, நேற்று மாலை நேரத்தில், இவர்கள் இருவரும் தங்களின் சைக்கிளில் பெசன்ட் அவென்யூ சாலை, நாயுடு ஹால் பகுதியில் சென்றுகொண்டு இருந்தனர். அச்சமயம், தனியார் பேருந்து ஒன்று அவ்வழியில் வந்தது.
பரிதாப பலி;
அதிவேகத்தில் வந்த பேருந்து, சைக்கிளில் சென்றுகொண்டு இருந்த மாணவிகளின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் மஞ்சுளா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், மாணவி தீத்தியா படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு அதிகாரிகளில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணை
விசாரணையில், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பேருந்து, 32 ஆசிரியர்களை சென்னையில் நடக்கும் போராட்டத்திற்கு அழைத்துவந்து இறக்கிவிட்டு, பின் மீண்டும் அவர்களை ஏற்றிக்கொண்டு பெசன்ட் நகர் கடற்கரை நோக்கி சென்றபோது விபத்து நடந்தது அம்பலமானது.
தலைமறைவான பேருந்து ஓட்டுநர் ராஜாராமுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: பல பெண்களிடம் மோசடி திருமணம்; கேடி இளைஞன் கைது.. இறுதி நேரத்தில் பெண்ணை காப்பாற்ற முயன்றும் தோல்வி.!