8 வயது சிறுமி மாரடைப்பால் பள்ளி வளாகத்திலேயே மரணம்; கேமிராவில் பதிவான இறுதி காட்சிகள்.!



in Gujarat Ahmedabad 8 Year Old Girl Dies by Heart Attack 

 

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், தல்டேஜ் பகுதியில் ஜாபர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8 வயதுடைய சிறுமி மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த சிறுமி, வகுப்பறைக்கு செல்லும் வழியில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேரில் அமர்ந்து இருக்கிறார். 

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாட்டை, குஜராத்தில் பெல்ட்.. அண்ணாமலை பாணியை கையில் எடுத்த குஜராத் ஆம் ஆத்மீ பிரமுகர்.! 

gujarat

மாரடைப்பு காரணமாக சோகம்

பின் ஒருசில நொடிகளில் அவர் மயங்கி விழவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், விரைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு நடந்த சோதனையில் சிறுமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: திடீரென பிரேக் அடித்த லாரி.. தனியார் பேருந்தின் வேகத்தால் 6 பேர் பரிதாப பலி..!