கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
100ல் பயணம்.. 108 வந்தும் பிழைக்காத உயிர்.. 21 வயது இளைஞனுக்கு எமனாகிப்போன ரீல்ஸ் மோகம்.!
அதிவேகத்தில் பயணித்து ஸ்டண்ட் செய்த இளைஞர், மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, கீரனூர் காலனியை சேர்ந்தவர் குமார் @ ராகுல் (21). இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து வீடியோ எடுத்து பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
மேலும், அவ்வப்போது ஸ்டண்ட் தொடர்பான சாகச விடீயோக்களையும் வெளியிட்டு வரவேற்பை பெற்றுள்ளார். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை, நண்பருடன் வீலிங் செய்துள்ளார்.
இதையும் படிங்க: குடிகார கணவன்... கள்ளக்காதலுடன் சேர்ந்து எமலோகம் அனுப்பிய மனைவி.!!
மின்கம்பத்தில் மோதி துயரம்
உளுந்தூர்பேட்டை - சேலம் சாலையில், திருச்சி இணைப்புச்சாலை பகுதியில் அதிவேகமாக இவர் இருசக்கர வாகனத்தை இயக்கிவந்தபோது, அது கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் குமாரின் தலை மின்கம்பத்தில் மோதி, படுகாயம் ஏற்பட்டு இரத்தம் அதிகளவு வெளியேறியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த அவசர ஊர்தி பணியாளர்கள், விரைந்து வந்து குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைக்குள் கட்சி பெயரைச் சொல்லி அடாவடி; வார்தைப்போரில் மல்லுக்கட்டிய மருத்துவர்..! விதும்பி நின்ற சிறுமி.!