கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கணவர் கண்முன் மனைவியின் நகை கொள்ளை.. திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்.. தரதரவென இழுத்துச்சென்று பகீர்.!
திரைப்படத்தை மிஞ்சும் வகையில், நிஜத்தில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் காண்போரை பதறவைக்கிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பந்தடி பகுதியில், சம்பவத்தன்று இளம் தம்பதி தங்களின் இருசக்கர வாகனத்தில் வந்தது. இவர்கள் வீட்டு வாசலில் நின்றபோது, பெண் தனது வாகனத்தில் இருந்து இறங்க முயற்சித்தார்.
அப்போது, தம்பதியை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல், பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தது. வாகனத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட பெண்ணை, அக்கும்பல் தரதரவென இழுத்துச் சென்றது.
இதையும் படிங்க: பெண் தூய்மை பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு; டூ-வீலர் மீது லாரி மோதி துயரம்.. திருமங்கலத்தில் சோகம்.!
நெஞ்சை நடுநடுங்க வைக்கும் காட்சிகள் :
இதனால் நிலைதடுமாறி வாகனத்தில் இருந்து கணவரும் கீழே விழுந்தார். பெண் சில மீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டு, அவரின் 3 சவரன் சங்கிலியில் 1.5 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.
கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்து நகையை பறித்து சென்ற கொள்ளையர்கள்
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 22, 2024
இரு நாட்களுக்கு முன்பு நடந்த வழிப்பறி குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை#Madurai | #ChainSnatching | #CCTV pic.twitter.com/yBC2X0ZseN
வீடியோ நன்றி ; புதிய தலைமுறை தொலைக்காட்சி
இதையும் படிங்க: மதுரை: சிமெண்ட் லாரி - கார் மோதி பயங்கர விபத்து; காவல் உதவி ஆய்வளர் பரிதாப மரணம்.!