கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இளம்பெண்ணுடன் உல்லாசம்; ஆசைக்கு இணங்காததால் தனிமை வீடியோ லீக்.. தென்காசி இளைஞருக்கு காப்பு.!
கள்ளகாதலியுடன் தனிமையில் இருக்கும்போது எடுத்த வீடியோவை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், அட்டைக்குளம் தெருவில் வசித்து வருபவர் முசாபுதின் (வயது 29). இவர் சென்னையில் வேலை பார்த்துவரும் நிலையில், அப்பகுதியில் வசித்து வந்த தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
இதையும் படிங்க: வற்புறுத்திய கள்ளக்காதலன்.. வேண்டாம் என்றும் கேட்காததால் இளைஞர் கொலை.. தோழியுடன் சேர்ந்து கள்ளக்காதலி சம்பவம்.!
கள்ளகாதல் மலர்ந்தது
இதனிடையே, முசாபுதின் - இளம்பெண் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனால் இருவரும் சென்னையில் தனிமையில் சந்திப்பதோடு, உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இதனை பெண்ணுக்கே தெரியாமல் முசாபுதின் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
வீடியோ, புகைப்படம் எடுத்த நபர்
பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் விஷயத்தை புகைப்படமாகவும் எடுத்து வைத்திருந்த நிலையில், இவர்களின் கள்ளக்காதல் வெளியே தெரியவந்து கண்டிப்பு எழுந்துள்ளது. இதனால் பெண் முசாபுதினுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனை பொருட்படுத்தாத முஷாபுதீன் பெண்ணை படுக்கைக்கு அழைத்துள்ளார்.
நெருக்கத்திற்கு மறுத்ததால் விபரீதம்
பெண் மறுப்பு தெரிவித்து சொந்த ஊருக்கே சென்றுவிட்ட நிலையில், ஆத்திரமடைந்தவர் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோவை பெண்ணின் அன்னான், அவரின் மனைவிக்கு வாட்ஸப்பில் அனுப்பி இருக்கிறார். இதனால் பதறிப்போன பெண்ணின் அண்ணி, கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முசாபுதினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மனைவி, 6 வயது மகள் கழுத்தறுத்துக் கொலை., கணவன் நடத்திய படுபயங்கரம்.. அதிர்ந்துபோன கரூர்.!