கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தென்காசி: காதல் திருமணம் அன்பான கணவன் இருந்தும் கசந்தது.. சகோதரனின் ஆணவ வெறியால் அப்பாவி பலி.!
குழந்தைகளுடன் வசித்து வந்த பெண்மணி, அன்புள்ள கணவன் இருந்தும் சகோதரின் புத்திகெட்ட எண்ணத்தால் கணவரை பறிகொடுத்த சோகம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் வசித்து வந்தவர் சின்னத்துரை. இவர் புதூர் பகுதியில் வேலை பார்த்துவந்தபோது, மாயா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதி என கூறப்படும் நிலையில், கலப்புத்திருமணம் செய்துகொண்டதாகவும் தெரியவருகிறது.
இதையும் படிங்க: தந்தை உயிரிழப்பால் வேதனை: மகனும் வருத்தத்தில் விபரீதம்.!
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தம்பதிகளுக்கு அன்புக்கு அடையாளமாக 2 மகன்கள், 1 மகள் என 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, வேலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சின்னத்துரை ராமேஸ்வரத்தில் தங்கியிருந்து வருகிறார்.
தனியாக வீடெடுத்து தங்கியுள்ளார்
ஆண்டுக்கு மொத்தமாக 3 முறை மட்டுமே அவர் ஊருக்கும் வந்து சென்றுள்ளார். தனியாக இருந்த மாயா 3 குழந்தைகள் பிறந்த பின் தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் அவர்கள் வீட்டருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார்.
செலவுபோக சம்பாதித்தய பணத்தை தவறாது மாதம் வீட்டிற்கு அனுப்பிவிடும் அன்புள்ளம் கொண்டவராக சின்னத்துரை இருந்துள்ளார். இதனிடையே, கணவருக்கு தொடர்புகொண்ட மனைவி, மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்க உங்களின் கையெழுத்து வேண்டும் என்பதால், ஊருக்கு வந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
மர்ம நபர்கள் கொன்றதாக நாடகம்
கணவரும் மனைவியின் பேச்சைக்கேட்டு ஊருக்குவர, சம்பவத்தன்று தம்பதிகளுக்கு இடையே வீட்டில் தகராறு நடந்துள்ளது. பின் சின்னத்துரையின் சடலத்தை ஆட்டோவில் ஏற்றிய மனைவி, கணவரின் சகோதரி வீட்டிற்கு கொண்டுசென்று, கணவரை யாரோ மர்ம நபர்கள் தாக்கிவிட்டார்கள் என கூறி இருக்கின்றனர்.
அவர்கள் சின்னத்துரையின் தலையில் இரத்தகாயம் இருப்பதைக்கண்டு கால்துறைனருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சின்னத்துரையின் மரணத்தை உறுதி செய்ததால், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதிகாரிகள் மாயாவிடம் விசாரித்தபோது முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் வந்து, பின் தனக்கு கணவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் கொலை செய்ததாக கூறி இருக்கிறார். அவரின் பேச்சில் தொடர்ந்து மழுப்பல் இருப்பதை உணர்ந்த அதிகாரிகள், மாயா மற்றும் அவரின் சகோதரர் மனு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கொலை சம்பவத்திற்கு காரணம் அம்பலமானது.
கணவரை அழைத்து படுகொலை
அதாவது, சின்னத்துரை - மாயா திருமணத்தில், மாயாவின் சகோதரருக்கு உடன்பாடு இல்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றாலும், தற்போது வரை ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாகவே சின்னத்துரை வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருவதை அறிந்துள்ளார்.
இதனால் தங்கையின் வாழ்க்கை தடம்மாறி செல்லக்கூடாது என நினைத்து, அவருக்கு வேறொரு வரன் பார்த்து திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளார். அதற்கு பேசிய தங்கையின் மனதையும் மாற்றியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவரை வீட்டிற்கு அழைத்த மனைவி, கணவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாயா, மனு சேர்ந்து சின்னத்துரையை கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளனர். பின் சுமார் 5 மணிநேரம் சடலத்துடன் ஊரைச்சுற்றி வந்தவர்கள், இறுதியில் சின்னத்துரையின் தங்கை கலா வீட்டிற்கு சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேற்படி விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: துணை முதல்வர் உதயநிதியை அணுஅணுவாக ரசித்து சொற்பொழிவாற்றிய கவிஞர் வைரமுத்து; விபரம் உள்ளே.!