"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
தாயை கொலை செய்து, மகன் தற்கொலை.. மனநலம் பாதிக்கப்பட்டு துள்ளத்துடிக்க சோகம்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (வயது 50). இவருக்கு தற்போது வரை திருமணமாகவில்லை. இதனால் தனது தாயார் கோவிந்தம்மாள் (வயது 80) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.
தாய்-மகன்
அவ்வப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கோவிந்தம்மாள் கணவர் பொன்னுசாமி, தனது மகன் சண்முகசுந்தரத்தில் தோளில் சாய்ந்தவாறு உயிரை விட்டார்.
இதையும் படிங்க: திருமணமாகாத ஏக்கம்... 36 வயது இளைஞர் தற்கொலை.! திருச்சியில் சோகம்.!
மனநலம் பாதிப்பு
அதிலிருந்து சண்முகசுந்தரம் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இதனிடையே, சம்பவத்தன்று கோவிந்தம்மாளை சண்முகசுந்தரம் சிறிய அளவிலான குலவிக்கல்லால் தாக்கியிருக்கிறார்.
தாய் கொலை, மகன் தற்கொலை
இந்த சம்பவத்தில் நிலை குலைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், தாயை கொலை செய்த சண்முகசுந்தரமும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர்களின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்றபோது, இந்த துயர சம்பவம் அம்பலமானது. இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஏரி ஆக்கிரமிப்பு வீடை அதிகாரிகள் இடித்துவிடுவதாக அச்சம்; தொழிலாளி பயத்தில் தற்கொலை.!