கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: திமுக பிரமுகர் அடித்துக் கொலை?.. இரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்ட சடலம்.. குடும்பத்தினர் சோகம்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ் தேவதானம் பகுதியில் வசித்து வருபவர் பிரித்விராஜ் (வயது 48). இவர் திமுக பிரமுகரான இருந்து வருகிறார். ப்ரித்விராஜின் சகோதரர் ரமேஷ்.
இவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகால தகராறு இருந்து வந்ததாக தெரியவருகிறது. இதனால் அவ்வப்போது வாக்குவாதமும் நடைபெற்றுள்ளது. இதனிடையே, இன்று காலையும் சகோதரர்கள் இடையே சண்டை நடந்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பூர்: சொத்துக்காக இப்படியா?.. மாமனாரை தீர்த்துக்கட்டிய மருமகன்.. அரங்கேறிய வெறிச்செயல்.!
இந்நிலையில், காலை தகராறு நடைபெற்றதைத்தொடர்ந்து, பிரித்விராஜ் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் சடலமாக இரத்தக்காயத்துடன் இருந்தார். இந்த விஷயம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பிரித்விராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
பிரித்விராஜ் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? வேறு காரணமா? சகோதரர்களுக்குள் என்ன பிரச்சனை? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பிரித்விராஜின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை: ஸ்பீக்கரில் சவுண்ட் வைத்ததால் வந்த வினை; அப்பாவி இளைஞர் கொலை., 5 பேர் கும்பல் வெறிச்செயல்.!