கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அருப்புக்கோட்டை: கார் - டூவீலர் மோதி பயங்கர விபத்து; எலக்ட்ரீசியன் பரிதாப பலி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, நார்த்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஞானப்பிரகாசம் (வயது 42).இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் நோக்கி பயணம் செய்தார். அப்போது, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், கார் ஒன்று பயணித்தது.
இரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக மோதிக்கொள்ளவே, வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், ஞானப்ரகாசத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கார் - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து; ஒருவர் பரிதாப பலி.!
இதையும் படிங்க: வறுமையில் படித்து முன்னேறிய காவலருக்கு இப்படியா நடக்கணும்? தஞ்சாவூரில் நடந்த சோகம்.!