விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
இன்று ஆஜராக வேண்டும்! நடிகர் விஜய்க்கு வருமானத்துறை விடுத்த அதிரடி உத்தரவு! பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பிகில். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளிவந்தது. மேலும் 170 கோடி ரூபாய் செலவில் ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரித்த இப்படம் எதிர்பார்த்ததை விட பெருமளவில் வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில் பிகில் திரைப்படத்தின் வரவு-செலவில் வரிஏய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலின்படி வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் இறங்கினர். அதன்படி பிகில் படத்தில் தொடர்புடைய ஏஜிஎஸ் சினிமாஸ் மற்றும் கல்பாத்தி அகோரம் குடும்பத்தாரின் வீடுகள், நடிகர் விஜய்யின் வீடு, பைனான்சியர் அன்புசெழியனின் அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றை வருமானவரித் துறை அதிகாரிகளால் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அதன் அடிப்படையில் நெய்வேலி என்எல்சி அருகே மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் விஜய்யை சென்னை அழைத்து வந்து அவரது வீட்டிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் விஜய் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து எந்த விவரங்களும் வெளிவரவில்லை. அதனை தொடர்ந்து விஜய் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் விசாரணை நடத்துவதற்காக வருமான வரித்துறை சார்பில் நடிகர் விஜய் , அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் கல்பாத்தி குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் விஜய் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.