ஈவி கார் வைத்திருப்போர் கவனத்திற்கு.. மின்சார காரில் உணவு சமைத்த இளைஞர்..!



  EV Car Cooking Video 

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம் சமீபகாலமாக அதிகரித்துள்ள நிலையில், இருசக்கர வாகனத்தில் தொடங்கி கார் வரை எலக்ட்ரிக் வாகனங்களாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக இந்தியாவிலேயே வெவ்வேறு மாநிலத்தில் தொழிற்சாலைகளும் பெருநிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளன. 

எலக்ட்ரிக் வாகனத்தில் உணவு தயாரிப்பு

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் முறை அறிமுகம் செய்யப்பட்டு, அவை சார்ஜ் ஏற்றப்பட்டதும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இளைஞர் ஒருவர் மின்சார காரில் இருக்கும் சார்ஜை பயன்படுத்தி, உணவு சமைத்த வீடியோ வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: மேகத்தின் மேலே உலவிய மர்ம உருவம் என்ன? வைரல் வீடியோ.. மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்.!

மின்சார வாகனங்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 முதல் 500 கிமீ வரை பயணம் செய்யும் வகையில் திறன் கொண்டது. அந்தந்த நிறுவன தயாரிப்புக்கு ஏற்ப இந்நிலை மாறும். இதனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வாகனத்தை வைத்து, இளைஞர் சமையல் செய்தது பலரிடமும் கவனத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஆட்டு குடல் குழம்பு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.!?