எல்லாம் போலி, இதுதான் உண்மை.. ரசிகர்களுக்காக பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட பரபரப்பு வீடியோ.!



ishwarya released video for fans

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவர் ஐஸ்வர்யா தத்தா .
இவர் தனது இணையபக்கத்தில் வீடியோ ஒன்றை ரசிகர்களுக்காக வெளியிட்டு உள்ளார்.

ஐஸ்வர்யா அளவுக்கு அதிகமான கோபத்தாலும்,செயல்களாலும்   ரசிகர்களிடையே பெரும் வெறுப்பை சம்பாதித்தார். இருப்பினும் ஐஸ்வர்யாவின் சிரிப்பிற்கும் குழந்தைத்தனமான பேச்சுக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

 மேலும் இவர் தான் போட்டியில் வெற்றி பெறுவார் என பல்வேறு காரணங்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில்  ரித்விகா மக்களின் மனதில் இடம்பெற்று போட்டியில் வென்றார்.

ishwarya

 மேலும் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு நன்றியையும், தான் செய்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதில் தனது இணையதளத்தின் உண்மையான பெயரை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐஸ்வர்யாவின் பெயரில் பல போலியான கணக்குகள் இருப்பதால் இந்த வீடியோவின் மூலம் உண்மையான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தின் பெயர்களை தெரிவித்துள்ளார்.

 இந்த வீடியோ வைரலாகி வருகிறது.