கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"லைஃபை தொலைச்சிட்டியே.." உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி.!! ஐடி ஊழியர் தற்கொலை.!!
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியான ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான ஐடி ஊழியர்
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்குமார்(34). இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மேலும் இவர் ஆன்லைன் ரம்மி மற்றும் பிட்காயின் முதலீடு போன்றவற்றிற்கு அடிமையாக இருந்ததாக தெரிகிறது. மேலும் இவற்றில் அதிக அளவு பண முதலீடு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூக்குபோட்டு தற்கொலை
இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சரண்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சரண்குமார் உடலை மீட்டு போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "என் ஆளு மேலயே கைய வைப்பியா.." காதலியின் தந்தை மீது தாக்குதல்.!! ரவுடி உட்பட இருவர் கைது.!!
60 லட்சம் கடன்
தற்கொலை தொடர்பாக காவல்துறையை நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்காக சரண்குமார் 60 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த கடன் தொல்லையால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வாழ்வே மாயம்... ரூம் போட்டு தற்கொலை.!! புது மாப்பிளைக்கு நேர்ந்த சோக முடிவு.!!