#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டிவி புகழ் ஜாக்குலின் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தொரியுமா? புதிய அப்டேட்
விஜய் தொலைக்காட்சி எத்தனையோ நபர்களை பிரபலமாக்கியுள்ளது. உங்ககிட்ட திறமை இருக்கா? உங்கள பிரபலமாக்கவேண்டியது எங்க பொறுப்பு என்பதுபோல திறமையுள்ள எத்தனையோ நபர்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமாகியுள்ளனர்.
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவகார்த்திகேயன், சந்தனம், ரோபோ சங்கர், ராமர் இப்படி எத்தனையோ பேர் விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள்தான். அந்த வகையில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின்.
கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கிய ஜாக்குலின் தனது சக தொகுப்பாளர் ரக்ஷனுடன் சேர்ந்து செய்யும் கலாட்டா மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். மேலும், இவரது குரல் இவருக்கு மிகப்பெரிய பிளஸ்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் தேன்மொழி என்கிற சீரியலில் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ளார் ஜாக்குலின். அதன் டீஸர் தற்போது வைரலாகி வருகிறது.
😀😀 விரைவில் வருகிறாள் தேன் மொழி 😊 #ThenMozhi #VijayTelevision pic.twitter.com/aCsYXjpGwY
— Vijay Television (@vijaytelevision) July 27, 2019