அடே யப்பா... சில மணி நேரத்தில்.... 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ஜப்பான் டீஸர்... உற்சாகத்தில் பட குழுவினர்.!



japan-teaser-creates-record-by-passing-30-millin-viewer

ரஜினி முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜப்பான். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்திருக்கும் இந்த திரைப்படம்  வருகின்ற அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து  இத்திரைப்படத்தின் அறிமுக வீடியோ கார்த்தி பிறந்தநாளான மே 25ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தத் திரைப்படத்தில் கார்த்தியுடன் அனு இமானுவேல் மற்றும் சுனில் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாவதாக முதலில் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் ப்ரோமோ வீடியோ வெளியிட்ட போது  அக்டோபர் 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Karthi

நேற்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ ரசிகர்களின் மனதை கவரும் வகையில்  அட்டகாசமாக அமைந்திருக்கிறது. வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும் கார்த்தி மற்றும் அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Karthi

மேலும் இந்த டீசர் வீடியோ வெளியான 2 நாட்களில் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இது பட குழுவினரின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இவர் நடித்திருந்த வந்திய  தேவன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஜப்பான் திரைப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள்  மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.