#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜவான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை வெளியிடுகிறார் நடிகர் விஜய்?; இன்ப அதிர்ச்சி தகவலால் குஷியில் ரசிகர்கள்.!
அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ஜவான்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டிரைலர் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. கடந்த சில நாட்களாகவே ட்விட்டரில் ரசிகர்கள் படக்குழுவிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், படத்திற்கு U/A தரச்சான்றிதழ் அளித்துள்ள மகாராஷ்டிரா மாநில தணிக்கை குழு, படம் 2 மணிநேரம் 15 நிமிடம் ஓடும் என்று தெரிவித்துள்ளது.
அதேபோல, ஜவான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.